பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

139


பற்றில் அதிகமாக ஈடுபடுபவர்கள். அதாவது கட்டில் சுகம், சோற்று சுகம் எனப் பேயாய் திரிபவர்கள்.

இப்படிப்பட்டவர்கள் சாப்பிட்ட பிறகு களைப்புக்கு ஆளாவார்கள் அவர்கள். வயிற்றுச் சுமை நிலை. அப்படி ஆனால், உண்டதும் படுத்தால், உபாதைகள்தாம் அதிகம் வருமே ஒழிய, உடலுக்கு நலம் எதுவும் கிடைக்காது.

உண்ட களைப்பு என்றுதான் பழமொழி கூறுகிறது. உண்ட களைப்பால் உறங்கு என்று கூறவில்லை.

பகலில் அதிக உழைப்பை சமாளிக்க சிறு தூக்கம் (Nap) இரவில்தான் ஆழ்ந்ததுக்கம் (Sleep) இதை மறந்து விட்டு இந்தப் பழமொழிக்கு உயிர் கொடுத்து பாழாவது புத்திசாலித்தனமாகவா தெரிகிறது? கொஞ்சம் யோசிக்கலாமே?


130. பாதகம் ஏழு

உடலை அழகாகவும், ஆற்றலோடும், பொலிவோடும், வலிவோடும் காக்க, ஒழுக்கமாக வாழ வேண்டும் என்கிறார்கள்.

அதற்கு சத்தான உணவு, உண்மையான உழைப்பு. நிம்மதியான உறக்கம், உடலைக் கெடுக்காத நல்ல பழக்க வழக்கங்கள் வேண்டும் என்பது எழுதப்படாத விதிமுறைகள் வாழ்க்கை வழிகள்.

ஆனால், உடலைப் பாதிக்கும் விஷயங்கள் ஏழு என்று பட்டியலிட்டுக் காட்டியிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் சொத்து சேர்க்க