பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆசைப்பட்டதை விட, தேகத்தில் சத்து சேர்க்க ஆசைப்பட்டதுதான் அதிகம். அதற்காக அவர்கள் கையாண்ட காரியங்கள், கண் போன்ற கடமைகள், கருத்தான நடைமுறைகள் எல்லாம் நாம் வாழும் விஞ்ஞான நாட்களில் கூட வியப்பை அளித்து வருகின்றன.

1. செருக்கு எனப்படும் கர்வம்
2. லோபம் எனப்படும் அற்ப ஆசை
3. களியாட்டம் எனப்படும் காமம்
4. வெறியூட்டி வருத்தும் பகை
5. புரியாமல் தின்கிற போஜனப் பிரியம்
6. ஆத்திரத்தை உண்டாக்குகிற கோபம்
7. சொகுசு என்று மயக்கும் சோம்பல்

இந்த ஏழும் மனிதன் கூடவே பிறந்து மாண்டு போகும் வரை மரண அவஸ்தையை உண்டாக்கும் பாதகங்கள்.

கொலை, களவு, பொய், மது, குருநிந்தையை விட பெரும் பாவங்கள் தாம் பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உடன் பிறந்தே கொல்லும் பகைகளை, புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவற்றிலிருந்து விலகி வந்து விட வேண்டும்.

“பாதகம் செய்வோரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”

என்றான்

மகாகவி பாரதி. பாதகம் செய்யும் பகைவன் யார்?