பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாம் கூறியது போல ஆத்துமா என்கிறார்கள். ஆத்துமா என்றால் காற்று என்று பொருள்; உயிர் என்று பொருள்.

இந்த உயிர்க் காற்று உடலில் பூரணமாக இருக்கும் போது தான் உடலிலே பலம் நலம் எல்லாமே மிகுதியாக இருக்கிறது. மனதில் ஆற்றலும் மகா சக்தியாக விளங்குகிறது. நிரப்பிக் கொள் என்பதைத் தான் காற்றுக்கொள் என்றார்கள். அதைத்தான் காற்றுக்கொள் என்றார்கள். அதைத்தான் நம் மக்கள் காத்துக் கொள் என்று கூறுகின்றனர்.

உடம்பை பார்த்துக் கொள்; உள்ளத்தை சேர்த்துக் கொள்; ஆத்மாவாகிய காற்றைக் கொள். அன்பர்களே! வாழ்வை காத்துக் கொள்ளுங்கள் என்போம் நாம்.


134. கல்வி
அறிவுக்காக கற்பது கல்வி. (கல்+வி)
வி என்றால் அறிவு என்ற அர்த்தம்
ஒழுக்கத்திற்காக் கற்பது கற்கை (கல்+கை)
கை என்றால் ஒழுக்கம் என்று அர்த்தம்
அறிவிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்ததை கற்பது
கலை (கல்+ஐ)

ஐ என்றால் உயர்ந்தது என்று அர்த்தம். அதனால் தான் கலைஞன் உயர்ந்தவனாக விளங்குகிறான். எல்லோரும் கலைஞர்களாக இருக்க வேண்டும். என்று இயற்கை விரும்புகிறது.

நாம்தான் தயாராக இல்லை!