பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உயர்வாகவும் ஒழுக்கமாகவும் அணிகிற உடுப்பே வெற்றியைத் தரும் என்பதற்காகவே அதை ஆடை என்றனர் (ஆடு=வெற்றி, ஐ=உயர்ந்த) இப்பொழுதெல்லாம் மானத்திற்கே நாணம் வருவது போலல்லவா ஆடை அமைந்து இருக்கிறது.


142. ஆத்திகமும் நாத்திகமும்

வாழ்க்கைக்கு வழிகாட்டுவது, வளம் சேர்ப்பது, வாழ்விப்பது அமைதிக்கும் ஆன்ம நேயத்திற்கும் ஆற்றுப்படுத்துகிறது.

ஆத்திகம் (ஆற்றி + இகம்) ஆற்றி = ஆறுதல் தருவது. எதையும் ஏன் என்று கேட்காமல் இதயம் ஏற்றுக் கொள்வது. போற்றிச் செய்வது - ஆற்றிகம். அதுவே பெரிய கொள்கையான வழிமுறையாகி மதம் என்பதாயிற்று.

எதையும் ஏன் என்ற கேட்டுத் தெரிந்து, தெளிந்து, ஏற்றுக் கொள்வது நாத்திகம். (நாற்றி + இகம்)

ஓரிடத்தில் விளைந்த பயிரை பிடுங்கி வந்து உரிய இடத்தில் நட்டு வைத்தால் பயன் பெறுவதை நாற்றிகம் என்பார். இகத்தில் நல்ல பயனை நாட்டுவதற்காக ஏற்றுக் கொண்ட கொள்கை எதிர்வாதம் செய்வதால் பிறரால் இகழ்வாக எண்ணப்பட்டது.

ஆத்திகம் அப்படியே மாறாமல் மாற்றாமல், பின்பற்றுவது. நாத்திகம் தெளிவான சிந்தனைகளால் ஏற்பட்ட நம்பிக்கையுடன் பின்பற்றுவது.

எது சிறந்தது என்பது உங்கள் மதிக்கு உட்பட்டதாகும்.