பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சுத்தராக மாற்றிக் கொள்ளலாமே? பித்தராக ஏன் திரிய வேண்டும்?


145. தர்மம்

தேகத்தைத் திடமாகக் காப்பது. சிந்தயை சோகம் வராது காப்பது. தெளிவாக வாழ்வது. முடிந்தால் பிறர்க்காக வாழ்வது அதில் மகிழ்பவருக்குப் பெயர் தர்மன்.

தர்மம் என்றால் தரமான, தகுதியான, ஒழுக்கமான வாழ்வு.

தேகத்தையும் மனதையும் தீய்த்து விடக்கூடிய தீங்கான செயல்களை தினந்தோறும் விரும்பிச் செய்பவன் அதர்மன். பாவியிலும் பாவி ஆவான்.

தேகத்தை அழித்து மனதைப் பாழாக்கி பண்பற்ற வாழ்க்கை வாழ்பவன் சிதர்மன் ஆகிறான்.

அவனது உடையில் கந்தை. மனதில் நிந்தை. வாழ்விலும் நொந்தவனாக நைந்தவனாக ஆகிறான்.

அதர்மனாகிவிட்டாலே ஆயிரம் கொடுமைகள். அதற்கும் மேலே சிதர்மன். வேண்டுமா இந்த வாழ்வு.


146. பக்தியிலே மூன்று நிலை

1. உருவத்தைக் கடவுளுக்கு அமைத்து, அதை உருக்கமாகப் பணிந்து வணங்கும் பக்தி முறை. இதற்கு உருவ வழிபாடு என்று பெயர். (உ-ம்) கடவுள் படங்கள்.

2. கடவுளுக்கு உருவமா? இருக்க வேண்டாமே! அதற்கென்று ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு