பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


3. உலகப் பொருள்களின் சிறந்த தன்மையை ஞானத்தால் புரிந்து கொள்வதற்குச் சித்துவம் என்று பெயர்.

சித் = ஞானம். துவம் = தன்மை. அவரவர் அறிவுக்கு ஏற்பவே உலக ஞானமும் உயர்ந்த வாழ்வும் உண்டாகிறது என்பது இதனால்தான்.


148. மந்திரமும் எந்திரமும்

நல்லதையே திரும்பத் திரும்ப நினைத்து விரும்பி விரும்பி உச்சரித்து, மனதுக்கு உறுதியையும் அமைதியையும் பெறுவதற்கு மந்திரம் என்று பெயர்.

மன் என்றால் சிந்தித்தல். மனம் என்பதும் அதனால்தான் வந்தது. திரம் என்றால் திரும்பத் திரும்பத்திரும்ப என்பதாகும். வலிமை என்றும் கொள்வதுமாகும்.

மந்திரத்தை மற்றவர்களுக்காகச் சொல்வது போலித்தனம். தனது மணமறிந்து சொல்லி மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படுவது தந்திரம் (தன் + திறம்) என்றும் சொல்லலாம்.

மந்திரத்திற்கும் தந்திரத்திற்கும் ஆணி வேராக இருப்பது. அடித்தளமாக சிறப்பாக அருமையாக உதவுவது எந்திரம். ஆமாம். அதுதான் நமது உடல் எனும் இயந்திரம்.

எந்திரம் பழுதில்லாமல் இருந்தால், இயக்கம் சிறப்பாக இருக்கும். எந்திரம் திறமாக வேலை செய்தால் எல்லாம் நல்லதே நடக்கும். எந்திரத்தை தந்திரமாக வைத்துக் கொள்ள தந்திரமும் தேவைதான். தந்திரமும் தேவைதான்.