பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

153


149. வேகமும் யோகமும்

உலகில் வசதியாக வாழ ஆசைப்படும். உள்ளத்திற்கு அருமையான வேலையாள் உடல். ஆவேசமான ஆசையை நிறைவேற்ற உடலுக்கு வேகம். அந்த உந்துதலில் செயலுக்கும் வேகம். நன்மை தீமை லாபம் நஷடம் பார்க்காத வேகம். அது கல்லா இளமையின் வேகம்.

அடிபடுவது, அனுபவங்கள், அவமானப்படுவது போன்றவை அதிகம் வர வர அறிவுதலை தூக்குகிறது. அது உள்ளத்தை நெறிப்படுத்த உடலை நலப்படுத்த அறிவு வேகத்தைக் குறைக்கிறது. அறிவான வேகம்தான் விவேகம்.

உள்ளத்தை நெறியிலிருந்து பிறழாமல் நிலைப்படுத்த உடலைக் கட்டுப்பாடுள்ள இயக்கங்களில் அமர வைத்து ஒன்று படுத்தி உயர்த்துகிற அறிவாற்றலுக்கு யோகம் என்று பெயர். உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து அடங்கிய நிலைக்குத்தான் யோகம் என்று பெயர்.

உடலாலும் உள்ளத்தாலும் செழித்து உலகில் உயர்ந்த வாழ்வு வாழ்ந்து மறைந்து போவதற்கு வியோகம் என்று பெயர். வியோகம் என்றால் மரணம். அதாவது துன்பமில்லாத இயற்கை மரணம். துர்மரணம் என்பது. இது தீயவர்களுக்கே உரியதாகும்.