பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

155


கொடுப்பதும், உழைப்பதும், சாதாரண விஷயமல்ல. அது மாபெரும் கலை.

மக்களிடம் இந்த விஷயம் விஷமாகி போயிருக்கிறது. மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலையும் கொலைபட்டுப் போயிருக்கிறது.


152. இரக்கமும் அரக்கமும்

அடுத்தவரையும் தன்னைப் போல நினைப்பது பண்பாடு. அடுத்தவருக்காக கெடுதல் செய்யாமல் பழகுவது அன்பாடு. உதவ முடியாவிட்டாலும் உள்ளம் ஒன்றிப் போவது இரக்கத்தனம். செயலால் மாட்டேன் என்றாலும், பரவாயில்லை. சிந்தையில் கூட மாட்டேன். என்று நிந்திக்க முயல்வது இறுக்கத்தனம். நல்லதை ஒழுக. விட்டு வேண்டாததை வைத்துக் கொள்ளும் பன்னாடையைப் போன்ற குணசாலி அவர்கள்.

அவர்கள் அந்தப் பன்னாடை குணத்தை வளர்த்துக் கொண்டே போவது அரக்கத்தனத்தை உண்டாக்கி விடுகிறது. அரக்கத்தனம் அத்தனை அவலங்களையும் உண்டாக்கும். அவமானங்களைத் துணை சேர்க்கும். கடைசியில் அழிவை ஏற்படுத்தும். இரக்கம் கூட இல்லாத மனிதர்கள் எல்லாம் ஈன ஜென்மங்கள்.


153. அச்சமும் அனிச்சமும்

மனிதர்களை மரணத்திற்கு உட்படுத்தி, மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்கிற ஆற்றல் பெற்றது அச்சம்.