பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

159


ஆட்பட்ட மனிதர்களே, ஏசப்படும் மனிதர்கள் ஆவார்கள்.

3. ஏசப்படும் நிலைக்கு இறங்கி வந்தாலும், தன் குணம் மாறாது, கீழ்த்தரமாக நடந்து கொள்கிறவர்களை, வீசப்படும் மக்கள் என்பார்கள்.

1. பேசப்படுகிற மனிதன் புனிதன்
2. பேசப்பட்டு ஏசப்படுகிறவன் - மனிதன்
3. வீசப்படுகிற மனிதன் கினிதன்

பீடை பிடித்தவன், நோய்பிடித்தவனுக்கு செல்லப் பெயர்தான் கினிதன்.

ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தால் அறியப்படுகிறான். நடத்தையால் தெரியப்படுகிறான். நல்லவர்கள் போல நடிப்பதுகூட கொஞ்ச நாளைக்குத்தான். அதன் பிறகு, சாயம் பூசிக் கொண்ட நரி ஒன்று, மழையில் நனைந்தபோது சாயம் வெளுத்துப் போனது போல - நடிப்பவர்கள் பேசப்படுகின்றார்கள்.

பேசப்படும் நிலைக்கு உயர்ந்தவர்கள் அந்த நிலையிலிருந்து தாழ்ந்து வரக்கூடாது அதுதான் ஆறறிவுக்கு தருகிற மரியாதையாகும்.


158. தமிழும் தமிழரும்

‘என்றுமுள தென்றமிழாக’ இருக்கின்ற தன்னிகரல்லாத் தமிழ்மொழியைத் தாய் மொழியாகவும். வாய்மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழர்கள் - தமிழர்கள் ஆக முடியாது.