பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

17


சிறையில் சீரழிகிறார்கள். இருந்தாலும் மரமண்டை மனித இனத்திற்கு உறைக்க வில்லையே? சாபக்கேடு தரும் பதவி தேவை தானா?

ஏன் பதவியைத் தேடியலைகிறார்கள் அதுதான் மனிதத்தனம்.


11. அறிவின் சிறப்பு

எனது அறிவை வெளிப்படுத்துவதில்தான் என் ஆசை. அதற்கு அங்கீகாரம் தேடி அலைவதில் அல்ல.

அங்கீகாரம் பெற அலைகிறபோது, அதற்கான ஆட்களிடம் அடிமையாகிவிடுகிறோம். அடிமைக்கு ஏது பெருமை? உரிமை? திறமை?

அடிமையாகிவிட்ட போதும், அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், வருவது மாரடைப்பு மரண அழைப்பு.

அறிவுக்கு அப்படி ஒரு நிலை தேவையா என்ன? விதைத்த விதைக்கு வலிமையிருந்தால் முளைக்கும். முளைத்த செடிக்கு வலிமையிருந்தால் கிளைக்கும். தெளிந்த அறிவில் செழுமை இருந்தால் நிலைக்கும். தெளிந்த அறிவில் நம்பிக்கை இருந்தால் பிழைக்கும்.

பிற கென்ன வருத்தம்? பிழை வராமல் உழைப்பைத் தொடர்வதுதானே சிறப்பு.


12. பக்தன்

பூஜை அறை ஒன்றை படாடோபமாக அமைத்துக் கொள்கிறார்கள். பலவித வாசனைப் பொருள்களை நிறைத்துக் கொள்கிறார்கள். எதற்காக பூஜை?