பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடவுளிடம் கையேந்திக் கொண்டு, பொன்னைக் கொடு, பொருளைக் கொடு, பதவியைக் கொடு, அதிகாரத்தைக் கொடு எனக் கெஞ்சுவதற்கு.

கடவுளிடம் எதையும் எதிர்பார்த்துப் பண்ணுவதற்குப் பெயர் பூஜை அல்ல. பிச்சை.

பிச்சை கேட்பவர்களுக்குப் பிச்சைக்காரன் என்று பெயர். பக்திமான் என்று பெயர் அல்ல. உன்னிடம் சரண் என்று சகலத்தையும் ஒப்புவிக்கிறானே அவன்தான் பக்தன்.

சரணாகதி ஆகிவிட்ட பிறகு சஞ்சலம் எதற்கு? சபலம் எதற்கு? பக்தியில் போலியாகிவிட்டால் அவனது வாழ்வே கேலிக்குரியதாகி விடுகிறதல்லவா.


13. மனித மனம்

வெள்ளத்திற்குப் பள்ளம் வேண்டும் ஓடி விழ. கஷடத்திற்கு ஆள் வேண்டும் கட்டிப்பிடித்து அழ, உள்ளத்திற்குக் கள்ளம் வேண்டும் உற்சாகத்துடன் எழ, உணர்ச்சிகளுக்குப் புணர்ச்சிதான் வடிகாலாய் தொழ.

நல்லதற்கெல்லாம் சிறுசிறு வடிகால் உண்டு ஆனால் மோசடிக்குத்தான் மூளை துரிதமாய் வேலை செய்கிறது. உதவிக்கு வருகிறது. வெள்ளமாய் பாய

ஆசைக்குத்தான் அறிவு ஆக்ரோஷமாக திட்டங்கள் தீட்டுகிறது. திடீரென்று குதித்து தூண்டுகிறது. இதனால்தான் மனித மனம் குரங்காகிறது. மனித வாழ்க்கை சிரங்காகிறது.

ஆயிரம் அவலங்கள் அரங்கேறுகின்றன.