பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

19


உள்ளத்தை ஒழுங்காக மேய்ப்பாரில்லை. சொல்வதையும் கேட்பாரில்லை.

விழவும் எழவும்தான் அவர்களால் முடிகிறது.


14. எல்லோருமே புண்ணியர்கள் தான்

நன்மை தீமை, பாவம், புண்ணியம் என்று போதிப்பவர்கள் பலர், போகிற உலகத்திற்குப் பாதுகாப்பு என்று சாதிப்பவர்கள் பலர், அதெல்லாம் வேஷம். வெறும் கோஷம் என்று வாதிப்பவர்கள் பலர்.

நன்மையும், தீமையும், பாவமும், புண்ணியமும் பிறருக்குச் செய்கிற காரியங்கள் என்பதுதான் எல்லோரின் நம்பிக்கையாக்க யாரும் முன்வருவதில்லை.

பிறருக்காகவே வாழ்ந்திட முயல்பவன் பேதை, அது பிழையான வாழ்வு.

தனக்காக தன் நினைப்போடு சுயநலமாகவே வாழ்பவன் சூதன்.

தனது வாழ்விற்கு பிறரை அழிக்க நினைப்பவன் அரக்கன்.

அரக்கத்தனத்தால் அழிப்பவன் கொடிய பாம்பன்.

பிறருக்கு உதவாவிட்டாலும் துன்பம் தராமல் வாழ்பவன் உலுத்தன்.

இனிமையாக வாழ்ந்திட முயன்று உதவி வாழ்பவன் இனிதன்.

இதில் வெற்றி பெறுகிறவனே புனிதன் ஆகிறான்.