பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தொண்டர்கள் அவற்றைப் பின்பற்றுவதும் நியாயம் தானே! தடம் புரளும் தலைவர்கள் இருக்கும் வரை முடமாகாமல் தொண்டர்கள் எப்படி இருக்க முடியும்? இன்றைய சமுதாயம் கீழ் நோக்கிப் போவதற்கு போவதற்கு இத்தகைய தடம் புரளும் தண்டவாளத் தலைவர்கள் இருப்பதுதான் காரணம்.


19. தேவையில்லை

உண்மை பேசுபவர்க்கு
நினைவாற்றல் தேவையில்லை
நன்மை செய்பவர்க்கு
பேச்சாற்றல் தேவையில்லை
அன்பு பூணுவதற்கு
அறிவாற்றல் தேவையில்லை
பண்பாடு காப்பதற்கு
அறிவாற்றல் தேவையில்லை
நல்லவழி செல்பவர்க்கு
பாதுகாப்பு தேவையில்லை
சொல்லும் மொழி நல்லதற்கு
சாதிசனம் தேவையில்லை.


20. மூன்று மனம்

இரண்டு மனம் வேண்டும் என்பார்கள்.
ஒன்று நினைக்க - மற்றொன்று மறக்க.
ஆனால் நமக்கிருப்பதோ மூன்று மனம்
ஒன்று நாய் மனம்
இரண்டு பேய் மனம்
மூன்றாவது தாய் மனம்