பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

25


இல்லாள். வந்தபிறகு இல்லத்தை ஆள்பவளாக மாறி விடுவதால் இல் + ஆள். இல்லாள் ஆகிறாள்.

அதன் படியே இலலத்தின் காவலனாக இருக்கிறவரை இல்லான் என்றார்கள். நாம் தான் அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோம்.


25. கல்வியும் செல்வியும்

அறிவோடு கற்றால் அதற்குப் பெயர் கல்வி. (வி = அறிவு)

கற்கும் அறிவில் நல்லதே நிறைந்திருந்தால் அதன் பெயர் நல்வி.

நல்வியின் நிழலாகத் தொட்ர்வது அறிவான சொல் என்பதால் அதன் பெயர் சொல்வி.

அறிவான சொல்லுக்கு அறிவான வழிப்பயணம் வரும். அதன் பெயர் செல்வி.

செல்வி என்பதற்கு இன்று அர்த்தம் வேறு என்றாலும் செல்வி என்றால் அறிவோடு செல்க. அளவோடு செல்க. பத்திரமாகச் செல்க. பாதுகாப்புடன் செல்க என்ற ஒரு அர்த்தம் இருக்கிறது.

வெற்றியோடு வாழ்கிற செல்வியைச் செல்வி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கல்விக்கு அழகு நல்வி. நல்விக்கு அழகு சொல்வி. சொல்விக்கு அழகு செல்வி. செல்விக்கு அழகு வெல்வி.


26. வாயும் வழியும்

வாய் கிழியப் பேசுபவன் தவளை வாயன்
வாய் வலிக்கப் பேசுபவன் வறட்டு ஜென்மம்