பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

27


28. பிரிவோ பிரிவு

தாயையும் குழந்தையையும் உயிரால் பிரிக்கிறது பிறப்பு.

உயிர் வாழும் மனித இனத்தை உடலால் பிரிக்கிறது. ஜாதி.

உடலால் சேர்ந்தால் உணர்வால் பிரிக்கிறது மதம் உணவாலும் உடையாலும் செயலாலும் பிரிக்கிறது - கலாசாரம்

தெம்பே தராமல் பண்புகளைப் பிரிக்கிறது பதவி. அவதாரங்கள் அரிதாரம் பூசிக் கொண்டு பிரிக்கிறது அதிகாரம்

திறமைகளை எருமைகளாய் உலவுமாறு பிரிக்கிறது - வறுமை

இப்படியே இருந்தால் நீ தாங்க மாட்டாய் என்று பிரிக்கிறது இறப்பு.

இந்தப் பிரிவுகளுக்குள்ளே பரிவுகாட்டிக் கொண்டு. உறவை காட்டிக் கொண்டு உயிர்ப்புடன் வாழ்வதுதான் வாழ்க்கையாகிறது. ஆமாம்! வாழ்க்கை ஒரு வித்தியாசமான வழிகாட்டல் மட்டுமல்ல. வழி நடத்தலும் தான்.


29. இரையும் இறையும்

மனம் என்னும் மாபெரும் விருட்சம். அதில் கற்றை கற்றையாகத் தொங்கும் விழுதுகள். அந்த விழ வைக்கும் பழுதுதான் ஆசைகள். ஆசை விழுதுகளில், ஊஞ்சல் ஆட்டம். ஆட்டத்தில் தொங்கல்தான் அதிகம். தொங்கிப் பிடிப்பதில் சோர்ந்து போனால் துள்ளித்துள்ளி ஆடுவது எப்படி முடியும்?