பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

31


அப்படி வெற்றி பக்கமே செல்லா அரைகுறை மனிதனை அரைமனிதன் என்றனர். அதற்காக ஒரு பழமொழியையே ஆக்கி வைத்தனர்.

‘ஆடை இல்லாதவன் அரை மனிதன்’ என்று (ஆடு+ஐ) ஆடை இல்லாதவன் - வாழ்க்கையில் புகழாகிய வெற்றி பெறாத குறைமனிதன். அதனால் அரை மனிதன் என்றனர்.

நமது ஆட்கள் பளபளக்கும் ஜிகினா ஆடைகளை அணிந்து கொண்டு அரை மனிதர்கள் நாங்கள் இல்லை என்று அறிவிப்பு செய்து கொள்கிறார்கள்.

அதைக் கூட நாம் மன்னித்து விடலாம். இந்த ஆடவர் என்ற வார்த்தை எங்கே எழுதப்படுகிறது. எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்றால் கழிவறைக்கு முன்னே ஆண்களுக்குரியது என்பதைக் குறிக்க ஆடவர் என்று எழுதுகின்றனர்.

ஆண்டவா! இந்த இழிநிலைக்கு இட்டுக் கொண்டுபோய் விட்டாயே! ஆடவா! சூடவா! உன்னை தேடவா!


35. புழுதியும் கழுதையும்

உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள வைப்பது பொதுக் கல்வி. வாழ்க்கை வருமானம் பெற துணை கொடுப்பது தொழிற் கல்வி. நன்றாகச் சமைத்துப் பயில வேண்டும் என்பதற்காக உதவுவது உணவுக் கல்வி.

கலை, இசை, ஓவியம் போன்றவற்றைக் கற்றுத் தருவது கலைக் கல்வி. ஜெகத்தையே திறந்து