பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பிறரைப் பயப்படுத்தி பணிய வைக்க அடியாட்கள். மனப் போதை மயக்கத்தில் கனிய வைக்க குடியாட்கள். அது இல்லாமல் இருந்தால் அடுக்காது ஆண்டவனுக்கு என்று தாகமாய் கிளம்பும் மோகத்தைத் தணிக்க மடியாட்கள்.

பொடியாட்கள் இப்படியே வாழ்ந்து தடியாட்களாகி விட தத்தளிக்கிறது சமுதாயம். விடியாதா என்று தவம் கிடக்கிறது நல்லவர்கள் மனம்.


38. எழுத்தாளன்

சமுதாயம் என்னும் தேகத்திற்கு இரத்த ஓட்டம் போன்றவன் எழுத்தாளன்.

காசுதான் குறிக்கோள் என்று கண்டதையெல்லாம் எழுதுகிற எழுத்தாளன் எயிட்ஸ் போன்றன்.

அவனால் அவனுக்கு மட்டும் கஷ்டம் இல்லை. அனைவருக்கும்தான்.


39. தேவையும் தீமையும்

இனிமையும் நுண்மையும் மிக்க ஒரு பொருளை உபயோகப்படுத்தி மகிழ்வதற்குத் தேவை என்று சொல்கிறோம். தே என்றால் இனிய; வை என்றால் நுண்மை, செழுமை.

தேவையான அளவுக்குத் தேவை இருக்கும்போது அதன் சேவை சுகமாக இருக்கும். சொர்க்கமாகச் சிரிக்கும்.