பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

35


இனிப்பு அதிகமானால் திகட்டிப் போகிறது. குமட்டலை உண்டாக்குகிறது. கொடுமையான உணர்வுகளைக் கொடுக்கிறது.

அதுபோலவே, தேவைகளை வளர்த்துக் கொள்கிறபோது தீமைகளே மிகுதியாகின்றன.

‘தீ+மெய்’தான் தீமை, தேகத்தைத் தீய்ப்பதுதான் தீமை, சுகத்தைத் தேய்ப்பதுதான் தீமை, சுகமான தேவையை சோகமான தீமையாக்கிக் கொள்வது விவேகமாகுமா?

மனித ஜாதியே தேவைகளைக் குவிக்கவே திரிகின்றது. தன்னைத்தானே தீய்த்துக் கொண்டு மாய்கிறது. என்ன செய்ய? மனித சாதியின் மகத்தான விதி அப்படித்தான் இருக்கிறது.


40. பணமும் பிணமும்

பாம்பின் படத்திற்கு ஒரு பெயர் பணம்.
ஆயுதத்திற்கு இன்னொரு பெயர் பணம்.
பாக்கியத்திற்கு மற்றொரு பெயர் பணம்.
கிரகம் என்று சொல்வதற்கு பெயர் பணம்.
நாணயம் என்பதற்கு ஒரு பெயர் பணம்.

ஆனால் இந்தப் பணமானது போய்ச் சேருகிறவர்க்குப் பாக்கியம் தருகிறதா? அன்பைத் தருகிறதா? அமைதியைத் தருகிறதா? ஆனந்தத்தைத் தருகிறதா? இல்லையே!

பணம் இல்லை என்றாலும் துன்பம்; பணம் சேர்ந்து விட்டாலும் துன்பம். பாம்பின் படம் போல பயமுறுத்துகிற பணம், பாம்பின் மாணிக்கம்போல