பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வருமா? தருமா? ம்ஹும் இல்லை என்றுதான் சரித்திரம் சொல்கிறது.

இப்படிப் பாடாய் படுத்துகிற பணம் என்றாலும், பிணமும் வாய் பிளக்கும் என்பது மிகைபடச் சொல்வதாகும்.

மக்கள் இனம் எல்லாமே பணம் என்றதும் பிணம் போல வாய் பிளக்கும். இங்கே கிடக்கும் பிணத்தைச் சொல்லவில்லை. நடக்கும் பிணத்தைத் தான்.

சர்வ நாடியும் அடங்கி ஜீவ நாடியும் ஒடுங்கி உறுப்புக்கள் யாவும் மடங்கி, கையேந்தி நடுங்கி இப்படி செத்த பிணமாகி விடுகிறார்கள் மக்கள். பணத்திற்காக செத்து வாயைப் பிளந்து பணம் கிடைத்ததும் பிழைத்துக் கொள்கிறார்கள்.

மரண வேதனைக்குரிய பணத்தையும் பிணமாகித்தான் பெறுகின்றார்கள்; பிணமாகித் தான் வாழ்கின்றார்கள்.


41. அந்த நாலுபேர்

மக்கள் எல்லோரும் அந்த நாலு பேருக்காகத்தான் வாழ்கிறார்கள். அந்த நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்றுதான் அஞ்சுகிறார்கள். தங்கள் கடைசிப் பயணத்திற்கும் அந்த நாலுபேரைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எல்லோரும் சொல்கிற அந்த நாலுபேர் யார்?

1. குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் என்றாள் அவ்வைப் பிராட்டி. மனிதருக்குரிய எல்லாம் இருக்கும்.