பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

37


ஆனால் அறிவு ஆற்றல் குறைந்திருக்கும் மரம் போன்றவன் அவன் ஒரு ஜாதி. பெயர் மரன்.

2. மரனைவிட சற்றுத் தேவலாம் என்கிற அளவில் அறிவுள்ளவன். பிறரைக் காக்கும் மனம் பெற்றவர். அரசர்க்கும் துணைவர் என்று பெருமைபடப் பேசப்படுகிறவன். இவன் பெயர் பாமரன்.

3. இல்லறம் காப்பதிலும் நல்லறம் வளர்ப்பதிலும் பல்லறம் ஓம்புவதிலும் வல்லவன். அறம் என்றால் ஒழுக்கம் என்ற அர்த்தம். அப்படிப்பட்ட ஒழுக்க வாழ்வில் உயர்ந்த அறன்.

4. உடல், மனம் போன்ற இந்திரியங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து தலைமகனாய் வாழ்கிறவன் இந்திரன்.

இந்த நான்கு பேரும்தான் சமுதாயத்தின் நான்கு சாதிகளாக இருக்கிறார்கள் அவர்களைத் தான் அந்த நாலுபேர் என்று அழகாகக் குறிக்கின்றனர்.


42. அழகு அழும்போது

அழகுக்கு ஆயிரம் பொருட்களைச் சான்று காட்டுவார்கள். ஆனால் அழகு என்றால் என்ன என்றால் பதிலில் குழம்பிப் போவார்கள்.

ஒரு பொருள் சீராக இருந்தால்; செப்பமாக இருந்தால்; வடிவாக இருந்தால்; வனப்பாக இருந்தால்; பொலிவாக இருந்தால்; வலிவாக இருந்தால்; ஒழுங்காக இருந்தால்; செழுமையாக இருந்தால் அதற்குப் பெயர் அழகான பொருள் என்று அர்த்தம்.

அழகு என்றால் சுகம் என்றே ஒரு அர்த்தம். அழகு எப்பொழுது அழுகிறது?