பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குற்றம் செய்கிறபோது; பாவம் தொடர்கிற போது; இகழ்ச்சி அடைகிற போது; நிந்தையால் நொந்து போகிறபோது அங்கே அழகு அழுகிறது. ஆமாம். சுகம் நழுவுகிறது. சோகம் பரவுகிறது. சிறுமை விளைகிறது.

அழகு சிரிக்கும்போது ஆன்மாவே ஆனந்தப் பரவசமடைகிறது. அழகு அழும்போது அவலத்தால் அகிலம் அவதிப்பட வாழ்வே வெறுமையாகிறது. வேதனை தொடர்கிறது.


43. காண்பான், நோன்பான், பூண்பான்

உலக வாழ்க்கையை அனுபவிக்க உதவுவது உடல்.

உலக நிகழ்ச்சிகளோடு பொருந்திப் போவது மனம்.

உலக வாழ்க்கையை அனுபவிக்கவும் பொருந்திப் போகவும் பார்த்துக் கொள்வது ஆத்மா என்கிற ஆன்மா.

1. உலக வாழ்க்கையை அனுபவிக்க, இயற்கையோடு பூணுவது அதாவது பொருந்திப் போவது அதாவது உட்படுவது. அதாவது அகப்படுவது உடல் தான். அதனால்தான் அதனை மிகவும் கெளரவமாக பூண்பான் என்று அழைக்கின்றனர்.

2. உடலுக்கு வலிமை சேர்க்க பொறுமை சேர்க்க, பெருமை அளிக்க, உலக நிகழ்ச்சிகளுடன் பொருந்தி உடலை ஆட்டுவிக்கும் அற்புத மனத்தை நோன்பான் என்கிறோம்.

3. இயங்குகிற உடல். இயங்குகிற மனம். இவற்றை நீரோட்டமாக ஓடி, நிழலோட்டமாகத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டமாகப் பார்த்துக் கொள்கிற உயிர் என்கிற