பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

39


காற்று என்கிற ஆத்மாவுக்கு காண்பான் என்று பெயர். ஆன் என்றால் he will see என்று ஓர் அர்த்தம் உண்டு. நொடியும் சோராது இந்த நன்மையான பணியை ஆற்றுவதால்தான் அதை ஆற்றுமா என்றனர். நாம் இதனை காண்பான் என் கிறோம். இந்த மூன்று பான்களும் முக்கியமானவை அல்லவா!


44. உதடு

உடலுக்குள் உணவை அனுப்புகிற வழிதான் வாய். வாய் என்றாலே வழி என்றுதான் அர்த்தம். பிறகு பேச்சுக்கு உதவும் பேறு பெற்றது.

வாயின் விளிம்புக்கு ஒரு பெயர் உதடு.

அதரம் என்று உணர்வு பொங்க அழைக்கப்படும் உதட்டை வெட்டு வாய் என்றும் கூறுவார்கள்.

பிளந்த வாயின் இதழ்ச் சுளைகள் தான் உதடுகள் என்று ஆயின. உதட்டினால் என்ன பயன்?

அழகான வாயாக வடிவமைக்க, கவர்ச்சியான முகமாகக் காட்டி வைக்க மட்டும் பயன்படவில்லை.

முத்தம் கொடுக்கும் யுத்த வேலைக்கும் இது பயன்படுகிறது.

ஏன் அப்படி?

உதடு என்றாலே முத்தம் என்று ஓர் அர்த்தம் உண்டு.

இப்படி இனிமை சுரக்க உதவுகிற உதடு, வெட்டு ஒன்று. துண்டு ரெண்டாய் போகுமளவுக்கு வேலை செய்து விடுகிறது.