பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

41


46. ஆசையும் அவாவும்

சிந்தை என்பது ஒரு விந்தையான விளைநிலம். அதில் தோன்றுவன எல்லாம் தொல் லைகளில் ஊன்றும். தொலைதூரம் தாண்டும். துறுதுறுவெனவும் தூண்டும். ஒருபொருளைப் பார்த்தவுடனே விருவிருவென விஷம் ஏறுவதுபோல நினைவு தோன்றி நிழலாகத் தொடர்ந்து நீரலையாக ஓடி மறைந்துபோவது. அதற்கு விருப்பம் என்று பெயர்.

நினைத்த மாத்திரத்தில் ஆயிரமாயிரம் விருப்பங்களை மழையாய் கொட்டுகிற ‘ஆசு’, ஆசையாகி பெருக்கம் கொள்கிறது. நினைத்த மாத்திரத்தில் கவியாய் பொழிகிறவரை, ஆசுகவி என் பார். அதுபோல நினைத்த மாத்திரத்தில் விருப்பங்களை அருவியாகக் கொட்டுகின்ற நிலையைத்தான் ஆசை என்கிறோம்.

தீர்கிற ஆசை, தீராத ஆசை என்று இரு பிரிவு உண்டு. தன் தகுதிக்கும் நிலைமைக்கும் பொருந்தாத ஆசை பேராசை, பேராசை ஏற்பட்டு விட்டால் நிராசை ஆகி விடுகிறது. அப்போது மேலும் உண்டாகிற பேராசை, வெறியாகி விடுகிறது. எல்லாவற்றையும் தனக்கேதான் வேண்டும் என்று விரும்புகிற விருப்பம் அவா ஆகிறது.

அவாவுகின்ற வெறிக்கு ஆளாகிறவர்களின் முடிவு அழிவுதான். தீயவற்றைத் தேடுகிற ஆசைக்கு, வெறி வந்து விடும். நல்லனவற்றைத் தேடுகிற ஆசைக்கு வேட்கை என்று பெயர். வேட்கையின் தேடுதலும் கூடுதலும் தான் இலட்சியம் ஆகிறது.