பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


50. மலம் வேண்டுமா? வேண்டும்!

மலம் என்றால் முகம் சுளிப்பவர்கள், மூக்கை அடைப்பவர்கள், விழிகளை மூடிக்கொள்பவர்கள் நிறைய பேர். உண்மை அதுதான்.

உண்ட உணவின் கழிவுக்கு மலம் என்று பெயர். 27-அடி நீளமுள்ள உணவுப் பாதையில் அதாவது வாய் முதல் எருவாய் வரை, உணவு புகுந்தது முதல் ஜீரணிக்கப்பட்டது போக மீதி கழிவாகி வெளியேறும் வரை அதற்குப் பெயர் மலம்.

கண்களில் பீளையும், காதுகளில் குறும்பியும், மூக்கில் சளியும், உடம்பில் வேர்வையும், அழுக்கும் எல்லாமே மலம்தான்.

மனதில் ஆணவமும், மாயையாகிய மோகமும், மனம் உடலால் செய்கிற தீவினையும் மலம்தான்.

மலத்தை அழிக்க, அகற்ற முயலலாம். ஆனால் அழிக்க முடியாது. அழித்து விடுவேன் என்கிற பேச்சே மலம் என்கிற அகங்காரம்தான்.

உணவு, மலம் முற்றிலும் வெளியேறிவிடாது. உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கும்.

அப்படி இருக்கும்போதுதான் உடலில் சமநிலையும் தெளிவும் வலிமையும் இருக்கிறது. இல்லையேல் உடல் தளர்ந்து விழுந்துவிடும், தள்ளாமை உண்டாகும் என்பார்கள்.

ஆகவே, உடலிலும் மனதிலும் உண்டாகி இருக்கிற மலங்களை தேவையான அளவுக்கு வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.