பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

45


அதிகமாக சேர்கிறபோது நாற்றமடிக்கிற குப்பையாகிவிடும். குப்பையை கூட்டி விடுவதுதான் அறிவுள்ளவர்க்கு அழகு.


51. அடியாள்

அடியாள் என்றதும் குத்து வெட்டு, கொலை கொள்ளையடிக்கிற கூட்டம், கூலிக்கு கொடுமை செய்கிற கும் பல் என்றுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

சின்ன வீடு என்பதற்குப் பொருள் வேறானது போல அடியாள் என்பதும் அவமானமான சொல்லாகிவிட்டது.

‘அடி’ என்பது ஞானம். ‘ஆள்’ என்பது வீரன், சமர்த்தன். ஞானத்தை ஆள்கிற சமர்த்தரைத் தான் அடிகள் என்றனர்.

அடிகள் என்றால் குருவானவர், தலைவர் பெரியோர் என்று அர்த்தம்.

அடிகளைப் பணிந்து போற்றி, தொண்டு செய்து, தூய வாழ்வு வாழ முனைவோரை அடியார் என்றனர். அவரையே அடியாள் என்றனர். தேவருக்குத் தொண்டு செய்ய வந்த பெண்களை தேவரடியாள் என்றனர். இன்று அது தேவடியாளாக மாறியது பொருள் கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

இப்போது மனவலிமை மிக்க ஞானமே இல்லாத மிருகம்போன்றவர்களால், உடல் வலிமை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வரும் ஆட்களை அடியாள் என்கின்றனர்.