பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

“புதுப்புது சிந்தனைகள்” என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.

எப்பொழுதும் ஏற்பட்டுக்கொண்டிருப்பது எண்ணங்கள். எப்பொழுதாவது தோன்றுவதுதான். சிந்தனை. எண்ணங்கள் சலனமாய்த் தோன்றி, சபலமாய் அடைந்து, சந்தோசத்துக்கும், சாந்திக்கும் இடையிலே நின்று சலசலப்புக் காட்டி ஓய்ந்து போய் விடும்.

ஆனால் சிந்தனைகள் அப்படியல்ல. திடீரென்று தோன்றி, தெளிவாக மனதிலே புகுந்து, ஆழமாக ஊன்றி, அகிலத்தையே வழி நடத்தக்கூடிய அளவிற்கு அற்புதமாக வழி நடத்துவது உண்டு.

இந்த நூலிலே உள்ள புதுப்புது சிந்தனைகள் நாம் அன்றாடம் பேசுகின்ற சொற்களில் அமைந்திருக்கின்ற புதிய கருத்துக்கள். நாம் எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை பேசினாலும், அதை ஆழமாக புரிந்து கொண்டு ஆசைப்படும் பொழுதுதான், இந்த வார்த்தைகளின் மகிமையும் பெருமையும் புரிகிறது.

உடலுக்கு உற்சாகம் கொடுப்பவை எவையென்று மக்களுக்குத் தெரியும். அந்த உற்சாக வார்த்தைகளில் கிளர்ச்சி உண்டாக்கக் கூடியவை எவை என்றும் மக்களுக்குத் தெரியும். அந்தக் கிளர்ச்சியையும் எழுச்சியை ஏற்படுத்தித் தளர்ச்சியை உண்டுபண்ணக் கூடிய அர்த்த புஷடியுள்ள சமாச்சாரங்களும் தெரியும். அவையெல்லாம் புது சிந்தனைகளும் அல்ல. பொது