பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

51


பழவினை என்றால் முன்வினை என்று அர்த்தம். முன் வினை என்றால் முன்பு செய்த காரியங்கள். முன்செயல் என்று சொல்லாமல் ஏன் வினை என்று சொல்கின்றார்கள்?

நாம் செய்கின்ற ஒரு காரியம் அப்பொழுதே ஒரு முடிவைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த் தியோ அல்லது துன்பத்தில் வீழ்த்தியோ விடுகிறது.

செயலும் விளைவும் ஏற்பட்டு அப்பொழுதே மறந்து போகும். அதாவது முக்கியத்துவம் இழந்து போகும்.

வினை என்பது செய்த செயலின் விளைவு. தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பது. தொடரும் செயலின் விளைவுகளைத்தான் வினை என்றனர்.

நல்ல காரியம் செய்தால் அதற்கு நல்வினை, பிறருக்குத் தீமை பயக்கும் காரியம் செய்தால் அது தீவினை.

இந்த இரண்டுக்கும் பொதுவான பெயர்தான் ஊழ்வினை. அதாவது ஏதாவது ஒரு முடிவை ஏற்படுத்தி விடுகிற வினை.

நல்வினை என்பது தன் தேகத்திற்கு நல்ல ஒழுக்கமான பண்பாடுகளுடன் செய்வது. தீவினை என்பது தன் தேகத்திற்கும் பிறருக்கும் துன்பத்தை அளிப்பதுபோல் செய்வது.

ஆகவே, நல்வினை நாடி வந்து உயர்த்தும். ஊழ்வினை என்கிற தீவினையானது ஓடி வந்து உறுத்தும். பயமுறுத்தும். அழிக்கும். மோசமாக்கும். நாசமாக்கும்.