பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


59. தாயும் தந்தையும்

தனியாக இருக்கிறபோது ஆண் - பெண் திருமணம். ஆகிவிட்டால் கணவன் - மனைவி, ஒரு வாரிசைப் பெற்றுவிட்டால் தந்தை - தாய். ஏன் தந்தை என்றும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றார்கள்? அதற்கும் காரணம் இருக்குமல்லவா!

ஒருவரிடமிருந்து ஒருவர் ஒன்றைக் கேட்டுப் பெறுகிறபோது கொடு, தா, ஈ என்று கேட்பதுண்டு. உயர்ந்த இடத்தில் உள்ளவர் தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவரை அதிகாரமாகக் கொடு என்பார். சரிசமமான நிலையில் உள்ளவர்கள் தா என்று கேட்பார்கள். தாழ்ந்த நிலையாளர்கள் மேலானவர்களைக் கேட்கும்போது எனக் கேட்பார்கள்.

கணவன் மனைவி ஆன பிறகு குழந்தைச் செல்வத்தைத் தா என்று சம அந்தஸ்துடனும், என்று கெஞ்சியும் கணவனிடம் மனைவி கேட்டுப் பெறுகிறாள். குழந்தைச் செல்வத்தை. தா, ஈ என்று கேட்டதும் அவள் தாயி ஆகி விடுகிறாள்.

தாயி என்றால் தாய்ச்சி என்று அர்த்தம். தாய்ச்சி என்றால் கர்ப்பிணி என்று பொருள். பிள்ளையைத்தான் சுமந்திருப்பதால்தான் பிள்ளைத் தாய்ச்சி என்ற பெயரைப் பெறுகிறாள்.

பயத்துடன் இருப்பதால் பயந்தாள் ஆகி, பிறகு குழந்தையை ஈனுகிறபோது ஈன்றாள் ஆகி, பிறகு தாய் என்ற முதல் நிலையை அடைகிறாள்.