பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

53


தா, ஈ என்று கேட்டு மனைவியின் விருப்பத்திற்கு உபகாரம் செய்த (உபகாரி - தந்தை) உபகாரியான கணவன், தந்தை என்று அழைக்கப்படுகிறான்.

தந்து என்றால் (வாரிசு) சந்ததி என்று அர்த்தம். சந்ததியைப் பெருக்கும் உபகாரத்தைச் செய்ததால், அவன் தந்தை என்று அழைக்கப்படுகிறான். மாதா, பிதா, அன்னை, அப்பா, அம்மா என்பதெல்லாம் பிறகு வந்த அன்புப் பெயர்கள்.

இவை இரண்டும் செய்தொழில் காரணமாக வந்த சிறப்புப் பெயர்கள்.

அதனால்தான் விலாசம் கேட்கிறபோது உனது தந்தை தாய் பெயரென்ன என்று கேட்கிறார்கள்.


60. ஒட்டுறவு

உறவு என்ற சொல் உற + உ என்று பிரிந்து கொள்கிறபோது உண்டாக்குகிற அர்த்தம். உள்ளத்தில் உணர்வுகள் பீறிட்டுக் கிளம்புகிற வகையில் உணர்த்தும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

உற என்றால் பொருந்துகிற, உ என்றால் அகமும் புறமும் என்று அர்த்தம். அகத்தாலும் புறத்தாலும் பொருந்துகிற அன்பினரைத்தான் உறவு என்று அழைக்க வேண்டும். அப்படிப் பொருந்துகிறபோது பல நிலைகள் அதில் உண்டாகி விடுகின்றன.

அதுதான் ஒட்டுறவு. ஒட்டும் உறவு, ஒட்டுகிற உறவு, ஒட்டிய உறவு என்கிற மூன்று நிலை.