பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போலியாகத் தெரிகிற முறை; கேலியாகத் திகழ்கிற முறை; வேலியாக அமைகிற முறை என்றும் இந்த ஒட்டுறவு மாறி விடுகிறது.

பணத்திற்கும், பொருளுக்கும், பதவிக்கும், அதிகாரத்திற்கும், ஆசைக்கும், வேட்கைக்கும் தீர்வு காட்டுகிற காரியங்களுக்குத்தான் இப்போதெல்லாம் உறவு என்ற வார்த்தை அடிபடுகிறது. உண்மையான அர்த்தம் எல்லாம் உலகை விட்டுப் போய் பலகாலமாகி விட்டது.


61. அறிவியல்

Science அல்லது Logos என்ற சொற்களுக்குத் தமிழ் படுத்துகிறபோது அறிவியல் என்கிறார்கள். இதனைச் சார்ந்தே, வேதியல், புவியியல், இயற்பியல், உயிரியல், வணிக இயல், உளவியல், தத்துவ இயல் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றார்கள்.

இதை விஞ்ஞானம் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தார்கள். ஞானத்தில் நான்கு வகை உண்டு.

1. அஞ்ஞானம் = ஞானசூன்யத்திற்கு உள்ள ஓர் அழகான பெயர்.

2. எஞ் ஞானம் = எஞ்சிய ஞானம். ஞான சூன்யத்திற்கும் மேம்பட்ட நிலை.

3. விஞ்ஞானம் = விஞ்சிய ஞானம். அதாவது மேம்பட்ட ஞானம்.

4. மெய்ஞானம் = இதை உலகளாவிய ஞானம் என்பர். உண்மையான ஞானம் என்பர்.