பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

55


நாம் உடல் பற்றிய தெளிந்த ஞானம் என்கிறோம். இப்போது புழக்கத்தில் உள்ள அறிவியல்தான் விஞ்சிய ஞானம் என்ற அடிப்படையில்.


62. பல (ழ) வாழ்க்கை

வாழ்க்கை மற்றும் குடும்ப உறவுக்குப் பற்று என்பது மிகவும் முக்கியம். பற்று பற்றிக் கொண்டால், முற்றிக் கொண்டால் அந்த வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? பலாப் பழம்போல, ஒரு சுளை எடுப்பதற்குள், பலாப் பழத்தோடு அல்லாடி, மல்லாடி, கை பிசுபிசுக்க கஷ்டங்கள் எல்லாம் பெற்று சுவைத்து மகிழ்வது. பலாப்பழம் பற்றிலிருந்து பற்றைக் கொஞ்சம் அறுத்துக் கொண்டு வாழ்வது - புளியம் பழம் போல. புளியம்காயானது தோலாடு ஒட்டிக் கொண்டு ஓட்டை உடைத்துக் கொண்டு தான் பழமாகிய பிறகு, ஒட்டில் ஒட்டாது. இருந்தாலும் உள்ளே இருக்கிற ஒரு காம்புக்குக் கட்டுப் பட்டு, விலகாது ஒன்றிக் கிடக்கும். இதுபோல குடும்பத்துள் இருந்தாலும் பற்று குறைந்த வாழ்க்கை முறை. விளாம்பழம் இருக்கிறதே! நன்கு பழுத்த பின் உள்ளே ஆடும். ஓடும். துள்ளும், குதிக்கும், ஆனால் ஒட்டோடு ஒட்டாது. இது விளாம்பழ வாழ்க்கை. குடும்பத்தின் உள்ளே இருந்தாலும் ஒட்டுதல் வாழ்க்கைக்கு இஷ்டப்படுவோர் உண்டு. ஆனால் கஷ்டப்பட வேண்டும்.

நடக்கிற காரியமா? நடந்தால் நிம்மதிதான்.