பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


69. பாக்கியவான்கள்

குளிக்கும் அறையில் பழைய வாளி ஒன்று இருந்தால் புது வாளி இல்லையே என்று அதைத் தூக்கி வெளியே வீசி விடாதீர்கள்.

புதுவாளி வருகிற வரை அந்தப் பழைய வாளி இருப்பதில் பழுதில்லையே! தண்ணீர் பிடிக்க வாளி இருந்தாக வேண்டுமல்லவா!

இருப்பதை வைத்துக் கொண்டு திருப்திப் பட வேண்டும். இருப்பதை விரட்டி விட்டு இல்லாததற்காக எதிர்பார்த்திருப்பதும் ஏங்கிக் கிடப்பதும், வீங்கி விழிப்பதும் வேண்டாத வேலைதானே!

பயன்படுத்திக் கொள்பவர்கள் எல்லோருமே பாக்கியவான்கள்.


70. விளையாட்டும் வாழ்க்கையும்

உலகில் விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றை ஒன்று தழுவியே செல்கின்றன. விளையாட்டு என்ற துணையை, வாழ்க்கையுடன் இணைத்துக் கொண்டவர்களுக்கு உலகம் இனிமையாகத் தோன்றுகிறது. விளையாட்டை வேதனை என்று எண்ணி மயங்குகின்றவர்களுக்கு வாழ்க்கையும் அப்படித்தான் வழி காட்டுகிறது.

வாழ்க்கை ஆட்டத்தில் காலமென்னும் பந்து உருண்டு ஓடுகிறது. இன்பம் என்ற இலக்குவை அடைய நாட்டில் சட்டங்களுக்கு (Law) உட்பட்டே செல்ல வேண்டும். விளையாட்டில் விதிகள் (Rules)