பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இதுதான் இயற்கையின் இன்றைய தர்மக் காட்சியாகப் பெருகிக் கொண்டிருக்கிறது.


73. செய்கிற செயலுக்கு

தீபத்தை - ஏற்று என்கிறார்கள்
அடுப்பை - மூட்டு என்கிறார்கள்
பந்தத்தைக் கொளுத்து என்கிறார்கள்
குப்பையை எரி என்கிறார்கள்.

நெருப்பைப் பயன்படுத்துகிறபோது இப்படி எல்லாம் பலவிதமான சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். ஏன்?

மென்மையான செயலை, நன்மை பயக்கும் காரியத்தை செய்கிறபோது, அதைச் சொல்வதும் மென்மையாக இருக்கும்போது - மனதுக்கு ஒரு விதமான இதமும் பதமும் கிடைக்கிறது.

வன்மையான செயலை செய்கிறபோது அதைச் சொல்லும் வார்த்தையும் வன்மையானதாக, வக்ரம் கொண்டதாக விளங்குவதால், மனதுக்குள் அப்படியே அந்த வக்ரம் குடிகொண்டு விடுகிறது.

மனதை மகிழ் விக்கும் காரியத்திற்கு மனதும், அதனைச் சார்ந்த நினைவும் முக்கியமல்லவா? அதனால்தான் சொல்வதில் நல்ல சொற்களைச் சொல்லுகிற செய்கையும் அப்படியே தொடரும் என்பது எத்தகைய உண்மை பாருங்கள்.