பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

63


74. மனிதர்கள்

உணர்வால் மட்டும் மனிதர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் மேற்கொள்கிற அன்றாட செயல்களால்தான் கணிக்கப்படுகின்றார்கள்.

வரம் உள்ள மனிதர்கள்:

இயற்கையாகவே மனிதர்கள் வரம் பெற்று வந்த பிறவியாளர்கள். வரம் என்றாலே மேன்மை என்று அர்த்தம்.

1. வரம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விவரம் வேண்டும். வி என்றால் அறிவு என்று அர்த்தம். ஆகவே, மனிதன் என்பவன் விவரம் உள்ளவனாக வாழ வேண்டும். அப்படிப்பட்ட அறிவாக வாழ்பவர்களுக்கு விவரமான மனிதர்கள் என்று பெயர்.

2. இருக்கும் அறிவையும் மேன்மை குணத்தையும் தங்களது அகங்காரத்தால் அகம்பாவத்தால் அழித்துக் கொள்கிறவர்கள். அவர்கள்தான் விவகாரமான மனிதர்கள் என்று பெயர் பெறுகின்றார்கள். வழக்கு அதாவது சண்டை போடும் குணம் கொண்டவர்கள்.

3. மூன்றாவது வகை மனிதர்கள் விகாரம் உள்ளவர்கள். எதிலுமே நேரடியாக சிந்திக்காமல் மாறுபாடாய் நினைத்து வேறுபாடாக முடிவுக்கு வந்து கூறுபோட்டுக் கொண்டாடும் வக்ரபுத்தியாளர்கள். வக்ரம் வந்தால் அக்ரமம் தானே விளைவு. விவரம் விவகாரம் என்று பிரித்தாலும் மனிதன் வரம் பெற்ற வாழ்வுடையவன் என்பதை மறப்பது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?