பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

65


சுவாசியுங்கள் “எங்கள் மக்களே. ஆழமாக சுவாசி, ஆழ்ந்து சுவாசி, அழுத்தமாக சுவாசி” என்று சுவாசிக்கச் செய்து விட்டால், உடலோ தூய்மையாகி விடும். மனமோ மேன்மையாகி விடும். பெறுகிற வாழ்வோ இன்பமாகி விடும்.

பிள்ளைகளுக்கு நன்றாகப் போதியுங்கள். பெற்றோர்களே! இயல்பான சுவாசத்திற்கும் மேலே ஓர் இதமான ஆழ்ந்த சுவாசம். அது போதும். பெரிய வாழ்வு வாழ!


76. தொழில்

வேலையைத் தொழில் என்கிறோம். தொழில்தான் வாழ்க்கைக்குத் துணையாக வருகிறது. வயிறு கழுவ மட்டுமல்ல. வருமானத்துடன் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழவும்தான். அத்தகைய ஆருயிர் தொழில் அன்றாடப் பணியில் தான், நாம் ஈடுபட்டிருக்கிறோம். பிடிக்காத வேலையாக இருக்கலாம். பிரச்சினை அது அல்ல. ஒரு வேலையில் இருக்கும்வரை, நாம் வேலை செய்தே ஆக வேண்டும். இந்தத் தொழிலில் இருந்து வேறு வேலைக்குப் போகும் வரை, தொடர்ந்து பணியாற்றும் வரை தூய்மையுடன் பணியைச் செய்ய வேண்டும். ஈடுபட்டிருக்கும் வேலையை மனதார விரும்ப வேண்டும். இன்னொருவர் குறை சொல்லாத அளவுக்கு வேலையில் ஈடுபாடு காட்ட வேண்டும். உலகில் உள்ள எல்லோருக்குமே விரும்பிய வேலைதான் கிடைத்திருக்கிறது என்று நீங்கள் நம்பினால் அது தவறான கருத்தாகும்.