பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


77. அம்சம்

ஒருவனைப் பார்த்து இவன் அம்சமாக இருக்கிறான் என்று வியக்கிறோம். என்ன காரணம்?

தோற்றத்தில் ஒரு கம்பீரம். தேகத்திலே வலிவு. முகத்திலே பொலிவு செயற்பாடுகளிலே தெளிவு. இந்த நிலை அவனுக்கு எப்படி வந்தது?

அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். நோய் நொடிகள் இல்லாமல் வாழ்கிறான். கவலை, கலக்கம் தீண்டாமல் காலம் கழிக்கிறான் என்பது அர்த்தம்.

அப்படிப்பட்ட அம்சம் அவனுக்கு எப்படி வந்தது? நாம் தினம் நொடிப் பொழுதும் விடாமல் சுவாசிக்கிறோம். சுவாசம் நின்று போகிறபோது உடல் சவமாகிப் போகிறது.

அப்படி என்றால் சுவாசம் மிக முக்கியம் அல்லவா? சுவாசத்தை நம்மை அறியாமல் இழுத்து விடுவது. இது எல்லோரும் செய்வது.

சுவாசத்தை நாம் அறிந்து புரிந்து கொண்டு செய்வது. இதுதான் அம்சத்தின் அடிப்படையாகும். நாம் மூச்சை இழுக்கும் போது ‘அம்’ (Ham) என்ற உணர்வோடு, ஒலியோடு உள்ளே இழுக்கிறோம். பிறகு, ‘சம்’ என்ற ஒலியோடு காற்றை வெளியே விடுகிறோம்.

அம் என்று ஆழ்ந்து மூச்சு இழுத்து, சம் என்று வெளியே விடுகிறபோது கொள்கிற சுவாசம் இருக்கிறதே அதுதான் ஒருவரின் தேகத்தைப் பூரணமாக்கி, அம்சமாக்கி விடுகிறது.