பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

69


முன்னும் பின்னும் தெரியாத ஒரு பெண் வீட்டிற்கு வருகிறபோது அவரை ‘அம்மணி’ என்று அழைப்பது வழக்கம்.

அப்படி அழைப்பது அவர்களைப் பெருமைப் படுத்துவதுதானா?

அம்மணி என்ற சொல். அம்மணம் என்ற சொல்லில் இருந்து வந்திருக்கிறது. அம்மணம் என்றால் நிர்வாணம். அதாவது மனதிலே எந்தவிதமான விருப்பும் வெருப்பும் இல்லாமல் வருகிற பெண். வந்த பிறகுதானே அந்த வீட்டின் வண்டவாளத்தைப் புரிந்து கொண்டு. மனத்திற்குள் எதையாவது நினைத்துக் கொள்ள முடியும். மனதிலே எதுவும் சலனமில்லாமல் சங்கடம் இல்லாமல் சமாதானமாக வரும் பெண்ணை அம்மணி என்று அழைப்பது பொருத்தம்தான் இந்தக் காலத்தில் இது என்னவோபோல் இருக்கிறதல்லவா?


80. ஆடவரும் ஆடவைப்பவர்களும்

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஆண்களை பெருமையாக ஆடவர் என்று அந்நாளில் அழைத்துப் போற்றினார்கள். ஆடு + அவர் என்பது தான் ஆடவராயிற்று. ஆடு என்றால் வெற்றி. ஆகவே, ஆடவர் என்றால் வெற்றியாளர் என்பது அர்த்தம்.

இன்று கழிவறைகளிலே ஆண்கள் படம் ஒன்றை எழுதி. அதிலே ஆடவர் என்று எழுதி வைக்கின்றார்கள். உள்ளே போய் வெளியே வருகிறவர்கள் எதிலே வெற்றி பெறுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.