பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


82. பாலான விஷயம்

ஆண், பெண் என்ற இரு பிரிவினைக் குறிக்க ஆண் பால், பெண் பால் என்று கூறுவார்கள். பால் என்பதற்கு ஆங்கிலத்தில் ‘‘செக்ஸ்’’ என்பார்கள்.

பால் என்றதும் பசும்பால், தாய்ப்பால், தேங்காய்ப்பால் என்றெல்லாம் நினைவுக்கு வரும். பால் என்றால் பாலுணர்வு என்றும் சொல்லி வைப்பார்கள்.

பாலுணர்வைத் தள்ளிய வைராக்கியமானவர்களை, பாற்பட்டார் என்று புகழ்வார்கள். பாற் பட்டார் என்பவர்கள் முனிவர்கள், தவத்தினர் ஆவார்கள்.

திருமூலரும் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார். ‘உடம்பால் அழியின் உயிரால் அழிவர்’ உடம் என்றால் ஒரு சேர, பால் அழியின் ‘செக்ஸ்’ ஆல் அழிபவர்கள், உயிரால் அழிந்து போகிறார்கள்.

அப்படி அழிபவர்களுக்குத் திடமான உடம்பும் தெளிவான ஞானமும் எதுவும் சேராது என்கிறார்.

ஆகவே, பாலான விஷயத்தில் அதிகமாக ஈடுபட்டால் பாழாகிப் போய் விடுவோம் என்பது பெரியோர்களின் அறிவுரை.

பாலான உடலுறவானது பலாவாக இனிப்பதுபோல் தோன்றுவதால், பாலான விஷயத்தை பலான விஷயம் என்று இந்தக் காலத்தில் வந்து விட்டது போலும். பலானதும் பாலானதும் பாழான பாதையைக் காட்டுவது. பட்டவர்க்கே புரிகிறது. படாதவர்கள் தான் துடிக்கிறார்கள்.