பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

73


83. உறவும் உறவியும்

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குச் சொத்து என்பது அவனது உடல்தான். அந்த உடல்தான் ஒருவனுக்கு முதல் உறவு. அதற்குப் பிறகுதான் தாய், தந்தை, சுற்றம், ஜெகம் எல்லாம்.

உறவு என்பது உற+உ என்று பிரிகிறது. உற என்றால் பொருந்துதல். உ என்றால் அகமும் புறமும் ஆகும். அதாவது அகத்திற்கும் புறத்திற்கும் பொருத்த மாகப் பொருந்துகிற போதுதான் அது உறவாகிறது.

உடலுக்கு உறவு என்பது உயிர் ஆகும். உடலுடன் பொருந்துகிற போதுதான், காற்று உயிர் ஆகிறது. அதாவது காற்று என்கிற ஆத்மா உயிர் என்கிற ஜீவன் ஆகிறது.

அதையே, ஜீவன் தரும் காற்றை ஜீவாத்மா என்கிறோம். அந்த ஜீவாத்மா உடலை விட்டு வெளியேறி வெளியே வந்து பரத்தில் (புறத்தில்) சேர்கிறபோது அது பரமாத்மா ஆகிறது.

இப்படி பொருந்தி வாழ்கிற காற்றாகிய உயிரைத்தான் உறவி என்கின்றனர். வி என்றால் அறிவு. உடலுடன் அறிவோடு பொருந்தி உறவாடி வருவதால்தான் உறவின் பெருமையைக் குறிக்க உயிரை உறவி என்று அழைக்கின்றனர்.


84. ஆட்டமும் பேயாட்டமும்

சீராக, சிறப்பாக இயக்கும் இயக்கத்தை விளைந்த ஆட்டம் என்றும், தடுமாறி தரம் மாறித் துள்ளுவதை,