பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இயக்குவதை பேயாட்டம் என்பதாகக் கூறுவதை நாம் அறிவோம். ஆனால் விளையாட்டு எனும். சொல்லானது அதி அற்புதமாகவே அமைந்திருக்கிறது. சீரான இயக்கமாகிய ஆட்டம் நல்ல முறையில் விளைந்திருப்பதைத் தான் விளையாட்டு என்று நமது முன்னோர்கள் கூறிச் சென்றனர். இத்தகைய விளையாட்டு எவ்வாறு தோற்றம் எடுத்தது. என்று ஆராயப் புகுந்த அனைவரும் மனித இனம் தனது மறுமலர்ச்சிக்காகவே தோறறுவித்துக் கொண்ட ஒரு மாபெரும் துணையாகும். சாதனமாகும் என்ற ஓர் ஒத்த கருத்தினையே உலகுக்கு உணர்த்தினர்.


85. ஒருவருக்கும் உதவாதவன்

காட்டில் வாழ்ந்த மக்கள் இயற்கையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மிருகங்களிடம் இருந்து தப்பிக்க ஒன்று கூடினர். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டனர். அதற்குச் சமுதாயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

சமு = என்றால் படை, தாயம் = என்றால் உறவு. உறவைப் படைபோல வைத்து ஒருவரை ஒருவர் காத்தனர். படையாகக் காத்த உறவு, புடைத்து விட்ட பகுத்தறிவால் சம+தாயமாக மாறிவிட்டது யாருக்கு யாரும் சமம்தான். உதவ வேண்டியது அவரவர் மனப்பண்பாடு என்று மாற்றிக் கொண்டனர்.

காலம் மேலும் மோசமாக மாறியது. ஒருவருக்கொருவர் குமுறிக் கொள்கின்ற குமுதாயம் ஆகிக் கொண்டனர். பொறாமை அழுக்காறு வஞ்சம் எல்லாம் நெஞ்சகத்தில் மஞ்சள் பூசிக் குளித்துக் கொண்டன. ஒருவருக்கு ஒருவர் உதவுவது மனிதப் பண்பாடு என்பது