பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

75


மாறிப் போய் விட்டது. பதவியும் அதிகாரமும் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களை விருத்தி பண்ணவே உதவின. அதனால்தான் இந்தப் புதுமொழி உருவாயிற்று. ஒருவருக்கும் உதவாதவன் கடைசியில் ஒன்றுக்கும் உதவாதவனாகவே ஒழிந்து போகிறான். அழிந்து போகிறான். இதுதானே நீதியின் செய்தி.


86. தொப்பை என்று ஏன் வந்தது

ஒட்டியிருந்தால் வயிறு. உப்பிக் கொண்டு தெரிந்தால் தொப்பை என்று கேலியாக விமர்சிப்பார்கள். எப்போதும் குலுங்கிக் கொண்டேயிருப்பது இரைப்பையின் வழக்கம். வருகிற உணவை இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஜீரணித்துக் கொண்டு வெளியேற்றி விடுவது அதன் வேகமான வேலை.

வருகிற உணவை வை, இறு என்ற பணிதான் வயிற்றுக்கு உரியது. வை, முடித்து விடு என்கிற இறு என்ற இரண்டும் சேர்ந்து வையிறு. வயிறு என்று ஆயிற்று.

இரைப்பைக்குத் தொடர்ந்து உணவை அனுப்பி, துன்புறுத்துவதால் அந்தச் சோற்றுப் பை சோர்ந்து போய் விடுகிறது. சரிந்து போய் விடுகிறது. விரிந்து போய் விடுகிறது.

இப்படிச் சரிந்ததை விரிந்ததை, சோர்ந்து போனதைக் குறிக்கிற வார்த்தைதான் தொல் என்பதாகும். புத்துணர்ச்சி உள்ளதையே புதுமை என்றும் இளமை என்றும் கூறுவார்கள். சோர்ந்து போனதையே முதுமை என்பார்கள்.