பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. வாத்தியார்: கவாத்து என்றால் பயிற்சி என்று பொருள். உடலுக்காக அல்லது மனதுக்காக பக்குவப்படுத்தும் பயிற்சிகளைக் கற்பிப்பவர் கவாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பிறகு அவர் வாத்தியார், உபாத்தியாயர் என்றுஅழைக்கப்பட்டார்.

வாத்தியாரிடம் தினம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு பயில்பவனை பயில்பவன் என்றனர். அதுவே பின்னாளில் பயில்வானாக மாறி வந்து விட்டது.

2. ஆசிரியர்: ஆசிரியம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது ஆசிரியர். ஆசிரியம் என்றால் கொழுகொம்பு என்று அர்த்தம். பச்சைக் கொடிகள் படர்ந்திட தன்னையே நிறுத்தி உதவுகிற பண்புகொழு கொம்புக்கு உண்டு. அதுபோல தன்னிடம் வருகிற பச்சைக் குழந்தைகளுக்கு நல்ல மாண்புகளைக் கற்றுத் தருவதால் அவர் ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் கற்பவர் மாணவர் என்று அழைக்கப்பட்டார்.

3. குரு: கு+ரு என்ற சொற்கள் சேர்ந்தது குரு, கு என்றால் இருட்டு. ரு என்றால் வெளிச்சம். அறியாமை என்ற இருட்டிலிருந்து ஆன்மீகம் என்ற வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் குரு என்று அழைக்கப்பட்டார். அவர் காட்டுகிற வழிகளில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு முழு நேரமாகப் பின்பற்றுகிற மாணவரைத் தான் சிஷ்யன் என்றார்.

அதனால்தான் வாத்தியர் - பயில்வான், ஆசிரியர் மாணவன், குரு-சிஷ்யன் என்று பெருமையாகப் பேசப்படுகிறது.