பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பிழைகளை பழிகளை பெரிது படுத்தாமல் காத்துக் கொண்டு வாழுங்கள் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


92. இல்லாமையும் இயலாமையும்

கையில் தேவையான அளவு பணம் இல்லாததை இல்லாமை என்றும்; அதனால் ஆக்கபூர்வமாக ஆர்வத்துடன் செயல்பட முடியாமல் போவதை இயலாமை என்றும் பேசுவது மனித இயல்பு.

பணம் இருந்தால் மட்டுமே பரபரப்பான வாழ்க்கை, சுறுசுறுப்பான இயக்கம் வந்து விடும் என்பதெல்லாம் ஏற்புடைத்து அல்ல. அது பேச்சுக்குப் பிரகாசமாக இருக்குமே தவிர பிரச்சினைக்குத் தீர்வாக ஆகாது.

இயலாமை என்பது கூடாமை. செயல்பட முடியாமை. அது எப்போது ஏற்படுகிறது? நமது உடம்பிலே சத்து இல்லாதபோதுதான் இயலாமை ஏற்படுகிறது.

அதனால்தான் இல்லாமெய் என்றனர். அதில்தான் இயலாமெய் அமைகிறது. சத்து இல்லாத மெய், பலம் இல்லாத மெய்யாக, அறிவு இல்லாத மெய்யாக வலிமை இல்லாத மெய்யாகப் போவதால், எதுவும் செய்ய இயலாமல் போகிறது.

ஆகவே, இல்லாமை, இயலாமை என்பது பணத்தால் அல்ல. பலத்தால் என்பதை அறிந்தால், வாழ்க்கையும் சுகமாக அமையும்.