பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வளம் என்பது உடலுக்கு உரியது, நலம், பலம், நிறையும் போது வளம் என்று வழங்கப்படுகிறது. அப்படியென்றால் உடலுக்கு நலம் பலம் தருவது எது? அவை வெப்பம், காற்று, நீர் என்ற மூன்றும் தான்.

இந்த மூன்றும் உடலில் அளவோடு இருக்கும்போது உடலுக்கு வளம் மிகுதியாகும். அளவு குறைகிறபோது அவதிதான் குவியும்.

உடலின் வெப்ப அளவு 98.4° வெப்பம் அதிகமானால் காய்ச்சல். வெப்பம் குறைந்து போனால் ஜன்னி. உடலின் நீர் அளவு அதிகமானால் ஊளைச் சதை, குறைந்து போனால் தசைப்பிடிப்பு, சுளுக்கு (Cramp). காற்று அளவு குறைந்தால் அசதி, பலஹீனம். தளர்ச்சி, ஆக அளவு குறையாமலும் மிகாமலும் பார்த்து பக்குவமாக வாழ வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமையல்லவா?

ஆகவே அளவை அறிவோடு கற்று தெளிவாக ஏற்று, பொலிவாகப் பெற்று, வளமாக வாழ வேண்டும் என்பதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு சம்சார சாகரத்திலே தாம் மூழ்குவோம் குழந்தைகளாகிய முத்துக்களை எடுக்கிறோம் என்று கிளிஞ்சல்களைப் பொறுக்கி, கிளுகிளுப்பு அடைகிறோம். பொலபொல வென பிள்ளைகளைப் பெற்று சத்தழிந்து சித்திழந்து செத்துத் தொலைகிறோம் என்கிற மக்களைப் பற்றி என்ன சொல்ல? என்ன செய்ய?