பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

85


95. படிப்பவனும் குடிப்பவனும்

மதுக்கடை வாசலில் மாட்டியிருக்கும் போர்டில் குடி குடியைக்கெடுக்கும்.

மது பாட்டிலை வாங்குகிறான் ஒருவன். அதிலே எழுதியிருக்கும் வாசகம் குடி குடியைக் கெடுக்கும்.

தொலைக் காட்சிகளில் கலைநயமான கவர்ச்சி கரமான விளம்பரம். குடி குடியைக்கெடுக்கும்.

குடியைக் கெடுக்கும் என்றவுடன் குடும்பத்தைக் கெடுக்கும் என்றுதான் மக்கள் எண்ணி, மனதை சமாதானப்படுத்திக் கொள்கின்றார்கள்.

மனம் மரத்துப் போகின்றது. குடி என்றால் குலம், கோத்திரம், மனைவி என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

இவற்றைத்தான் கெடுக்கும் குடி என்பதைத்தான் எல்லோரும் நினைக்கின்றனர்.

குடி என்றால் உடம்பு என்பதுதான் முதல் அர்த்தம். குடியானது குடியைக் கெடுக்கும் என்றால் குடியானது உடம்பைக்கெடுக்கும்.

உடம்பு கெட்டால் அவனது பிறந்த குலம் கெடும். பரம்பரை கெடும். கோத்திரம் கெடும். கட்டிய மனைவியும் கெடும்.

ஆக, குடியானது குடிப்பவனது உடம்பைக் கெடுக்கும் என்றும் எழுதியபிறகும் அதைப் படிப்பவனும் குடிக்கிறான். குடிப்பவனும் படிக்கிறான்.