பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

89


ஆத்மா என்பது பிராணன், உயிர்க்காற்று. அதனை மிகுதிப்படுத்தும்போது, உடல் குறையும், மனக் குறையும் கட்டுப்பட்டு விடும். அதனால் கிடைப்பது ஆனந்தம்.

அதனால்தான் துறவிகள் எல்லோரும் ஆனந்தர் என்று பெயரைச் சூட்டிக்கொண்டனர்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது இந்த மூன்றைதான். அழிக்கின்ற பொருட்களை அல்ல.


99. பழியாய்க் கிடக்கும் குழிகள்

தரையிலே தோன்றுகின்ற குழியும், பள்ளமும் தானாய் தூர்ந்து போகும்; மேடாகிவிடும். எத்தனை நதிகள் வந்து கலந்தாலும், கடலானது நிரம்புவதில்லை. ஏனென்றால் அதன் பரப்பளவும் கொள்ளளவும் அதிகம்.

ஆனால் 6 அடிக்கும் குறைவான மனிதன் உடல். அதில் ஓரடிக்கும் குறைவான வயிறு. அதை நம்மால் நிரப்ப முடிகிறதா?

தரையிலே இருப்பது தெரிகிற குழி. அதற்குப் பெயர் மெய்க்குழி. உடலிலே இருப்பது தெரியாத குழி. அதற்குப் பெயர் பொய்க்குழி. பொய்க்குழி என்றாலே வயிறு என்றுதான் அர்த்தம்.

நமது சின்ன உடம்பிலே 4 வகையான குழிகள் உள்ளன. இந்தப் பொய்க் குழிகள் நான்காகும். 1.பசிக்குழி, 2. நோய்க்குழி, 3. வறுமைக்குழி, 4.பிறவிக்குழி.