பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

91


வயிறு புடைக்க உண்பதுதான் சுகமா? நாள் முழுதும் வயிறு குறைய குறைய நிரப்பிக் கொண்டிருப்பதுதான் சுகமா?

அப்படியில்லை. மிதமாக உண்பவன்தான் சுகமானவன் என்கிறது உணவுமுறை மிதம் என்றால் அளவு, அசனம் என்றால் சோறு அசனி என்றால் சோறு உண்பவன் ஆக மிதமாக உண்பவனுக்கு மிதாசனி என்று பெயர். அதை சுகமாக உண்பவனுக்கு சுகாசனி என்று பெயர்.

இது ஒரு சீனப் பழமொழி, You eat little you eat more என்பது.

நீங்கள் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் நிறையச் சாப்பிடலாம் என்று அதற்கு அர்த்தம்.

கொஞ்சமாக அளவாகச் சாப்பிடுகிறவர்களுக்கு, வியாதி வராது. வியாதி வராவிட்டால், நெடுங்காலம் நிம்மதியாக வாழலாம்.

வாழும் காலம் வரை சாப்பிட்டாக வேண்டும் அல்லவா! அதைத் தான் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மதாசனி என்றார்கள். நாமும் இன்று அதை சுகாசனி என்கிறோம்.


101. மருந்தும் மருத்தும்

துன்பம் தரும் வலிகளுக்கு நோய் என்று பெயர். துன்பத்தைத் துடைத்து நோயை விரட்டும் பொருளுக்குப் பெயர் மருந்து. மருந்து என்றால் பலர் பலவிதமாக சாதாரணமாய் நினைத்துப் பேசுகின்றார்கள். மருந்து என்றால் அமுதம் என்று அர்த்தம். அ+முதம் என்று