பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

93


வெளியே வராமல். வெளிப்படாமல் செய்து வருபவரைப் பார்த்துக் கேலியாகக் கூறும் பழமொழி. இதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எத்தனை பொருள் பொதிந்ததாக இருக்கிறது!

குண்டு சட்டிக்குள்ளே என்பதை குண்டு சட்டிக்கு உள்ளே என்பதாகப் பாருங்கள் குண்டு என்றால் உருண்டு திரண்ட, வலிமையான சட்டி என்றால் ஒரு பாத்திரம், பானை - உடம்பு. குதிரை என்றால் பிராணவாயு என்று ஓர் அர்த்தம். ஓட்டு என்றால் சுவாசி என்று அர்த்தம். உருண்டு திரண்ட வலிமையான தேகத்திற்கு ஆழ்ந்த சுவாசம் செய்து உயிர்க்காற்றை சுவாசியுங்கள் என்று கூறுவது இதற்காகத்தான்.

நீங்கள் குண்டு சட்டிக்காக குதிரையை ஒட்டலாம். தவறே இல்லை. அது தன்னம்பிக்கையை மட்டுமல்ல தளராத தேகத்தையும் வலிமையான வாழ்வையும் வழங்குகிறது.

குறிப்பு: ஆரியன் நல்லன், குதிரை இரண்டுள என்று பாடுகிறார் திருமூலர் (பாடல் 546) ஆரியன் என்றால் மனத்தவன். குதிரை இரண்டு என்றால் பூரகம், இரேசகம் என்ற உயிர்ப்பு நிலை இரண்டு என்பதைக் கொண்டு இந்தப்பழமொழிக்குப்பொருள் கொண்டிருக்கிறேன்.


103. காயம் என்பது பொய்யல்ல

காயம் என்பது நமது தேகத்தைக் குறிக்கும். காயமே இது பொய்யடா வெறுங்காற்று அடைத்தப் பையடா என்பது சித்தர் பாடல். சிந்தை தெளிந்தவர் தான் சித்தர்.