பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒரு நிமிடத்திற்குள் 23 லிட்டர் இரத்தத்தை இறைத்து உடலுக்கு ஒப்பற்ற அத்தனை பெருமை. நமது இதயத்தின் எடை எவ்வளவு தெரியுமா? 300 கிராம். 300 கிராம் தங்கம் என்றால் வாயைப் பிளந்து கொண்டு அலைகிற மக்களுக்கு இதயத்தின் மதிப்பு எப்படிப் புரியும்?

இதயம் தன்னை முழுவதுமாகப் பிசைந்து கொள்கிறபோதுதான் இரத்தம் வெளிப்படுகிறது. இப்படி ஒரு நாளைக்கு லட்சக் கணக்கான முறையில் பிசைந்து கொண்டு பணியாற்றுகிற போது அதற்கு ஓய்வு வேண்டாமா? அதனால்தான் உறக்கம் அவசியம் தேவை என்கின்றனர். குறைந்தது ஒரு மனிதனுக்கு 8 மணிநேரம் தூக்கம் தேவை. அப்போதுதான் இதயம் ஓய்வு பெற்று இதம் பெறுகிறது. இரக்கம் இல்லாமல், உறக்கம் கொள்ளாமல் அலைந்து விழித்துக் கொண்டிருக்கிற ஆட்களுக்கெல்லாம் இரத்தக் குழாய்கள் எல்லாம் நலிந்து நைந்து போவதால்தான், இரத்த ஓட்டம் குறைந்து போவதால்தான் மாராகிய இதயத்திலும் அடைப்பு ஏற்படுவதால்தான் உயிருக்கு உடைப்பு ஏற்பட்டு ஓடி விடுகிறது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு பற்றிய நிலையை எவ்வளவு இங்கிதமாக எழுதிச் சென்றிருக்கின்றார்கள் பாருங்கள். இன்னின்ன வகையான சுவை உணவு வேண்டுமென அவர் கூறினார். மனைவியோ மனம் உவந்து வேண்டிய பலகாரம் பண்ணி வைத்தார். உண்டபடியே மனைவியுடன் உல்லாசமாகப் பேசினார். பேசிக் கொண்டிருக்கும்போது இடது பக்கம் கொஞ்சம்