பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IW. சொல்

பெயர்ச்சொல், வினைச்சொல் :

(உ-ம்) வேலன் வந்தான்.

வள்ளி பாடுகிருள்.

மழை பெய்யும்.

இக்க வாக்கியங்களில் வேலன், வள்ளி, மழை என்பன பொருள்களின் பெயர்கள். இவை பெயர்ச் சொற்கள். ஆனல் வந்தான், படுகிருள், பெய்யும் என்பன தொழிலை உணர்த்தி கிற்கின்றன. இவ் வாறு தொழிலக் குறித்து கிற்கும் சொல் வினைச் சொல் எனப்படும். ஒரு பொருளின் பெயரைக் குறித்து நிற்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.

ஒரு பொருளின் தொழிலக் குறித்து நிற்கும் சொல் வினைச் சொல் ஆகும். (வினே-தொழில்)

அறுவகைப் பெயர்கள் : (உ-ம். பொன், மதுரை, நாள், கை, வெண்மை, வருதல்.

இவற்றுள் பொன் என்ற பெயர் ஒரு பொருளை யும், மதுரை என்பது ஓர் இடத்தின் பெயரையும், நாள் என்பது ஒரு காலத்தின் பெயரையும், கை என்பது ஒர் உறுப்பின் (சினேயின்) பெயரையும், வெண்மை என்பது ஒரு கிற த்தின் (குணத்தின்) பெயரையும், வருதல் என்பது ஒரு தொழிலின் பெயரையும் குறித்து கிற்கின்றன். ஆதலால், பெயர்ச் சொற்கள் பொருட் பெயர், இடப் பெயர், காலப் பெயர், சினேப் பெயர், பண்புப் பெயர், தொழிற். பெயர் என ஆறு வகைப்படும் என்பதை உணர்க.

ஒரு பொருளைக் குறித்து கிற்கும் பெயர் பொருட் பெயர் ஆகும். (உ-ம்) பொன், மணி, மனிதன், கோபாலன், மரம்.